Uncategorized

முதல் கணவரை விவாகரத்து செய்தது ஏன்? பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்!

 

அனு பிரபாகர் கன்னட திரையுலகில் பிரபலமான நடிகை. கன்னட நடிகை ஜெயந்தியின் மகன் கிருஷ்ண குமாரை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவருடன் 12 ஆண்டுகள் வாழ்ந்த அனு பிரபாகர், கடந்த 2014ம் ஆண்டு கணவரை விவாகரத்து செய்தார்.

பின்னர் அவர் கன்னட நடிகர் ரகு முகர்ஜியை 2016 இல் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு நந்தனா என்ற மகள் உள்ளார். தனது முதல் திருமணம் முறிந்தது குறித்து அனு பிரபாகர் முதல்முறையாக பேசியுள்ளார்.

கன்னட தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: நீங்கள் கேட்பதால் இப்போது சொல்கிறேன். நடிகை ஜெயந்தியின் மகன் கிருஷ்ண குமாரை நான் திருமணம் செய்தபோது என்னை மிகவும் கவனித்துக் கொண்டார்கள். ஆனால், திருமணம் ஆனவுடன் நடிப்பை விட்டுவிடக் கூடாது என்று நடிகை ஜெயந்தி என்னிடம் கூறினார். அவர் முதலில் அடக்கமாக உடை அணியுமாறு கேட்டுக்கொண்டார்,

அது யாராக இருந்தாலும் சரி. இதனால் நான் மனமுடைந்தேன். வாழ்க்கை என்பது ஒருமுறை தான். அதை மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் வாழ வேண்டும். மனதில் வேதனையோடு வாழக்கூடாது. அதனால்தான் நான் எனது முதல் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டேன்’ என்று தெரிவித்தார். தற்போது நடிகை அனு பிரபாகரின் இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading