Uncategorized

முன்னணி நாயகியாக வலம்வந்த சிம்ரனின் 50ஆவது படம்!

 

90களின் இளசுகளின் கனவு நாயகியாக வலம்வந்த சிம்ரனின் 50ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2000ஆம் ஆண்டுகளில் அஜித், விஜய் உட்பட பல முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ள சிம்ரன் தற்போதைய காலத்தில் இடையிடையே ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ‘ஈரம்‘ திரைப்படத்தின் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘சப்தம்‘ திரைப்படத்தில் சிம்ரன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அவருக்கு தமிழில் 50ஆவது படமாகும்.

இந்தப் படத்தின் நாயகனாக ஆதி நடித்துள்ளதுடன் லட்சுமி மேனன், 90களின் நாயகி லைலா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் படத்தில் இணைந்துள்ளனர்.

‘சப்தம்‘ திரைப்படத்தை 7ஜி பிலிம்ஸ் மற்றும் ஆல்பா பிரேம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துவருவதுடன் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading