Local

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சிக்கலில்

றிசாத் பதியுதீன் மீது குற்றச்சாட்டை முன்வைக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச.!

முன்னாள் அமைச்சர் றிசாத் பதியூதீன், அமெரிக்காவில் பேணி வரும் வங்கி கணக்கு ஒன்றிற்கு, கடந்த 2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதக் காலப்பகுதியில் ஒரு இலட்சம் டொலர்கள் வைப்பிடப்பட்டுள்ளதாக, அமைச்சர் விமல் வீரவன்ச கூறுகிறார்.

கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி அவர் இதனைக் கூறினார்.

52 நாட்கள் அரசாங்கம் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் இந்த பணம் றிசாட் பதியுதீனின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகத்துக்கு இடமான இந்த நிதிப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு, பதில் காவற்துறை மா அதிபர் மற்றும் குற்றப் புலனாயவுத் திணைக்களத்திடம் தாம் கோரிக்கை விடுத்துப்பதாகவும் விமல் வீரவன்ச கூறினார்.

கடந்த தினம் கொழும்பில் உள்ள வீடொன்று சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போது, அங்கிருந்து வெவ்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்ட 227 காணி உறுதிப்பத்திரங்கள் மீட்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் 8 மூலப்பிரதிகளும் கிடைந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த அரசாங்கக் காலப்பகுதியில் சதொச நிறுவனத்தின் ஊடாக இடம்பெற்ற பல்வேறு மோசடிகளுடன் சம்மந்தப்பட்ட பல்வேறு ஆவணங்களையும் குற்றப் புலனாய்வுதுறையினர் மீட்டிருப்பதாக விமல்வீரசன்ச கூறுகிறார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading