Local

முன்னாள் அமைச்சர் ரிஷாத் எப்படி சிக்கினார்?

கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மறைந்திருந்த வீடுகளில் இருந்த சிசிரிவி கமராக்களை பொலிசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கடந்த ஆறு நாட்களாக பொலிசார் ரிஷாத் பதியுதீனைத் தேடிய நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில், தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவர் தற்போது, குற்றப்புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கடந்த புதன், வியாழக்கிழமைகளில் களுபோவில வைத்தியசாலைக்கு அண்மையில் வைத்தியர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்துள்ள விடயம் தெரிய வந்துள்ளது.

வியாழக்கிழமை பிற்பகல் அங்கிருந்து வெளியேறி, தெஹிவளை நகரசபை அருகிலுள்ள மரிக்கார் என்பவரின் வீட்டில் தங்கியருந்தார், இன்று அதிகாலை வரை அங்கேயே அவர் தங்கியிருந்தார்.

ரிஷாத்தை மறைத்து வைக்க உதவினார் என்ற குற்றச்சாட்டில் களுபோவில வைத்தியசாலை வைத்தியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிஷாத் பதியுதீனின் தொலைபேசி சிக்னல்களை அடிப்படையாக வைத்தே அவரது இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

-அருன் ப்ரசாத்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading