Local

முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் குறித்த மனு விசாரணை நிறைவு

முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்த உயர்நீதிமன்றம், அதன் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை குறித்த தனது இரகசியக் கருத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை ரத்துச் செய்யும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேராவினால் குறித்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading