Local

முன்னாள் ஜனாதிபதி கோட்டா 11 ஆம் திகதி நாடு திரும்புகிறார்?

சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு திரும்பும் கோட்டாபய, சிறிது காலத்தின் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்கவுள்ளார்.

அதற்கமைய, மீண்டும் தீவிர அரசியலுக்குள் வருவதா, இல்லையா என்பது குறித்து அவரது நெருங்கிய தரப்புகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபயவுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை அந்நாட்டில் தங்கியிருக்க சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன் பின்னர் அவர் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது . அதேவேளை கோட்டாபய நாடு திரும்பியவுடன், மிரிஹானவில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்திற்குத் திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, கோட்டாபய மீண்டும் நாடு திரும்புவதற்கான சரியான நேரம் இதுவல்ல என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading