World

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பிரதமராகிறார்!

ஜப்பானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) அந்நாட்டின் புதிய பிரதமராக நாடாளுமன்றம் முன்பு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பான் பொதுத் தேர்தலை அக்டோபர் 27ஆம் திகதி நடத்த புதிய பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, அந்நாட்டின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து சமீபத்தில் இராஜினாமா செய்தார்.

டோக்கியோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆளும் கட்சியின் தலைமைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார்.

67 வயதான கிஷிடா 2021 செப்டம்பரில் ஆளுங்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார், மேலும் மூன்றாண்டு காலப் பிரதமராகவும் இருந்தார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading