World

மூன்றாவது கணவருடன் சேர்ந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட பெண்!

தமிழகத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதி பிடிபட்ட நிலையில் அது தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக பகலில் பூட்டியிருக்கும் வீடுகளில் தொடர் திருட்டுகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து பொலிசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த தம்பதியினரைத் தடுத்து நிறுத்திய போது அவர்கள் மது போதையில் இருந்தது தெரிந்தது.

சந்தேகத்தின் பேரில் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விசாரணையில், அந்தப் பெண் நாகர்கோவில் டவுன் பகுதியைச் சேர்ந்த லதா (40) என்பதும், அவருடன் வந்தது மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த ராமு (32) என்பதும் தெரியவந்தது.

லதா, ராமுவை மூன்றாவது திருமணம் செய்துகொண்டிருக்கிறார். லதா தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், அவரின் முதல் கணவர் அவரை பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் இரண்டாவது திருமணம் செய்த லதா இரண்டாவது கணவருடன் சேர்ந்து கொள்ளையடித்து வந்தார், அவர் சமீபத்தில் சிறைக்கு சென்றுவிட்டதால் ராமுவை மூன்றாவது மணந்து கொண்டு பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதையடுத்து, இருவரையும் கைது செய்த பொலிசார் அவர்களிடமிருந்த 30 பவுன் தங்க நகையை கைப்பற்றியுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading