Local

‘மெகா’ கூட்டணி அமைத்து ஐ.தே.க. தேர்தலை சந்திக்கும்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்திருப்பது சட்டவிரோதமான செயல் என்று ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

அலரிமாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ ஜனாதிபதி முதலில், அரசியலமைப்புக்கு மாறாக, பிரதமரைப் பதவிநீக்கம் செய்தார். அதன் பின்னர் நாடாளுமன்றத்தை முடக்கினார்.

நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாத நிலையில், அவர் இரண்டாவது சட்டவிரோத செயலாக, நாடாளுமன்றத்தைக் கலைத்திருக்கிறார்.

இதுவே எமக்கு கிடைத்த வெற்றி. முதல் ஆட்டத்தில் ஜனாதிபதி தோற்றுவிட்டார்.
எனினும், ஐதேக பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைத்து தேர்தலுக்கு முகம் கொடுக்கத் தயாராக இருக்கிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading