Gossip

மேகி நூடுல்ஸ் செய்து கொடுத்த மனைவியை விவாகரத்து கோரிய கணவர்!

இன்றைய நவீன உலகில் எல்லாம் டிஜிட்டல் மாயமானதை அடுத்து பாரம்பரிய உணவுகளுக்கு டாட்டா சொல்லி துரித உணவுகளை மக்கள் அதிகம் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.

இன்னும் சொல்லப்போனால் மூன்று வேளையும் துரித உணவை மட்டுமே உண்பவர்களும் உள்ளனர்.

அந்த வகையில் மைசூரில் தனது மனைவி காலை மதியம் இரவு என மூன்று வேளையும் மேகி மட்டுமே சமைத்துத் தருவதாகக் கூறி விவாகரத்து கேட்டுள்ளார் ஒரு நபர்.

அதில் அவர் தனது மனைவிக்கு நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சமைக்கத் தெரியவில்லை. காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் நூடுல்ஸ் மட்டுமே சமைத்துக் கொடுக்கிறார்.

கடைக்குச் சென்று மளிகை சாமான் வாங்கினால், வெறும் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை மட்டுமே வாங்கிக் கொண்டு வருகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவாகரத்து வழக்கு குறித்து பெல்லாரி மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி எம்.எல். ரகுநாத், “இந்த வழக்கை நாங்கள் மேகி வழக்கு என்று குறிப்பிடுகிறோம். இருவரும் மனம் ஒத்து விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading