Sports

மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடரிலிருந்து வெளியேறியது!

அயர்லாந்து மற்றும் மே.இந்திய தீவுகள் அணிக்கு இடையில் இன்று இடம்பெற்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் 11ஆவது தகுதிகாண் போட்டியில் அயர்லாந்து அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதனூடாக உலகக்கிண்ண சுப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பை மே.இந்திய தீவுகள் அணி இழந்ததோடு, உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மே.இந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியதோடு, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக பிரெண்டன் கிங் 62 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதனையடுத்து, 147 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, போல் ஸ்டைர்லிங்கின் 66 ஓட்டங்களின் உதவியுடன் 17.3 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது.

இந்த வெற்றியின் ஊடாக இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் குழு B இல் சுப்பர் 12 சுற்றுக்கு அயர்லாந்து அணி தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading