Local

மேலும் 11 துறைமுக ஊழியர்களுக்கு கொரோனா!

மேலும் 11 துறைமுக ஊழியர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் துறைமுக ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளுக்கு அமைய குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, கொலன்னாவை நகரசபை ஊழியர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கொலன்னாவை நகர சபை அதிகார பிரிவில் இதுவரை 86 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
ஜா-எல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உரிய பிரதேசங்கள் சிலவற்றில் நேற்றையதினம் 33 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதில் 6 பேர் ராஜகிரிய பொலிஸ் விசேட அதிரடி பிரிவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கல்பிட்டி ஆதார வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். இதன் காரணமாக குறித்த வைத்தியசாலையில் தாதி ஒருவர் உள்ளிட்ட இருவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading