Local

மொட்டிடம் சரணடையுமா ‘கை’? – மைத்திரி தரப்புக்கு பஸில் ‘செக்’

பரந்துபட்ட அரசியல் கூட்டணி  ஒன்றை அமைப்பது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர்  பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில்  வேறொரு சின்னத்தில் பொது அணியாக போட்டியிடுவதற்கு இரண்டு கட்சிகளும் உடன்பாட்டுக்கு வந்திருப்பதாக அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க  கூறியிருந்தமை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“ இதுதொடர்பாக சில பேச்சுக்கள் நடத்தப்பட்ட போதிலும் இன்னமும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.எஸ்.பி.திசநாயக்க கூறியதில் எந்த உண்மையும் கிடையாது. ஒரு சின்னம் தொடர்பாக முன்மொழிவுகள் வைக்கப்பட்டன. ஆனால் அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தாமரை மொட்டு சின்னம் மிகவும் கவர்ச்சிகரமான ஒன்று”  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading