Local

மொட்டு அணியின் தேசியப்பட்டியலில் மூன்று முஸ்லிம்கள் ஒரு தமிழருக்கு வாய்ப்பு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு செல்லவுள்ள 17 உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.
இதில் ஒரு தமிழ் உறுப்பினருக்கும் மூன்று முஸ்லிம் உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாண முன்னாள் ஆளுநனர் சுரேன் ராகவனுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கண்டி, பதுளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இ.தொ.கா. பாரிய அளவில் வாக்குகளை பெற்றுக்கொடுத்துள்ள பொதுஜன பெரமுனவுக்கு பெற்றுக்கொடுத்து. இதனால் இ.தொகாவுக்கு ஒரு தேசியப் பட்டியல் வழங்கப்படுமென பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ள 17 பெயர்களில் இ.தொ.காவின் சார்பில் எவரும் இல்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் துரை மதியுகராஜா, முன்னாள் எம்.பி. ராஜதுரை ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading