World

மோடியை விட இம்ரான்கான் மிகவும் ஆபத்தானவர்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மிகவும் ஆபத்தானவர் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் பேசுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நரேந்திர மோடியை விட பாகிஸ்தானுக்கு இம்ரான் கான் மிகவும் ஆபத்தானவர், இதை மக்களால் கண்டுகொள்ள முடியவில்லை என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முழுவதும் நடந்த வன்முறை போராட்டங்கள் ஒரு “கலகம்” என்று ஆசிப் கூறினார். “இந்த எதிரி உண்மையில் எமது பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஆகும்.

மே 9 ஆம் திகதி அதற்கு சான்றாகும் என்றும் கவாஜா முகமது ஆசிப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சியின் தலைவராக இருக்கும் இம்ரான் கான், தற்போது எண்ணற்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்.

மே 9 ஆம் திகதி அவர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதால் நாடு தழுவிய போராட்டங்கள் தூண்டப்பட்டன.

பாக்கிஸ்தான் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இப்போது இம்ரான் கானின் கட்சி நாடு தழுவிய ஒடுக்குமுறைக்கு சாட்சியாக இருப்பதால் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading