Local

மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிளின் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தம்புள்ளை வேமெடில்ல நீர்த்தேக்கத்தின் வான் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.நேற்றிரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.நான்கு நண்பர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ள நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் 16 வயதுடைய இரண்டு பாடசாலை மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.மற்றைய மாணவர்கள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் இன்று காலை வரையில்
கால்வாயில் மிதந்துக் கொண்டிருந்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.விபத்து இடம்பெற்ற போது மாணவர்களின் சத்தம் கேட்டு மாணவர்களை மீட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading