Local

யாழில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர சம்பவம் -தீவிர விசாரணையில் பொலிஸார்

யாழ்ப்பாணம் ஆவரங்காலில் வீட்டு உரிமையாளர்கள் வெளியில் சென்றதை அவதானித்த கொள்ளையர்கள் குறித்த வீட்டுக்குள் நுழைந்து 22 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் இந்த துணிகர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெளியில் சென்றுவிட்டு வந்தவேளை, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளதை உரிமையாளர்கள் அவதானித்துள்ளனர்.

பின்னர், அதுதொடர்பில் ஆராய்ந்த போதே 22 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading