LocalNorth

யாழ். கொடிகாமத்தில் பதற்றம்! – பொலிஸாரின் வாகனம் ஆயுதங்களுடன் கடத்தல்

யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸாருக்குச் சொந்தமான வாகனம் ஒன்றை இனந்தெரியாத குழு ஒன்று கடத்திச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த வாகனத்துக்குள் பொலிஸாரின் ஆயுதங்கள் இருந்தன என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சம்பவத்தையடுத்து பெருமளவு பொலிஸார் தென்மராட்சிப் பிரதேசத்துக்கு வரவழைக்கப்பட்டுத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வாகனத்தைத் தேடும் பணியில் இராணுவத்தை ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading