World

ரஜினிக்கு அரசியல் தெரியாது நடிகை ரோஜா ஆவேசம்!

புதுச்சேரி ஆந்திராவில் மறைந்தநடிகரும், முன்னாள் முதல்- மந்திரியுமான என்.டி.ராமாராவின் 100-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பேசினார்.

இந்த நிலையில், புதுச்சேரி திருக்காஞ்சியில் நடைபெற்றுவரும் புஷ்கரணி விழாவில் கங்கா ஆரத்தியில் கலந்துகொள்ள வந்திருந்த ஆந்திர மாநில மந்திரி ரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரஜினி சார் அரசியல் வேண்டாம்ன்னு நினைக்கும்போது அரசியல் பேசக் கூடாது. கிருஷ்ணர் என்றால் என்.டி.ஆர். அப்படித்தான் நாங்க பார்த்திருக்கிறோம். அவரை எப்படிக் கொன்னாங்க, அவரோட கட்சியைச் சந்திரபாபு நாயுடு எப்படி எடுத்துக்கிட்டாங்க என்பதெல்லாம் ரஜினி சாருக்கு நல்லாவே தெரியும்.

ரஜினி சார் தெரியாம தப்பா பேசிருக்காருன்னு நினைச்சேன், ஆனா தெரிஞ்சு தப்பா பேசிருக்காரு. அதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு. தெலுங்கு ஆளுங்க எல்லாருமே ரஜினி சார சூப்பர் ஸ்டாரா விரும்புறாங்க. ஆனா இன்னைக்கு அவர் பேசினதைப் பார்த்து தெலுங்கு ஆளுங்க, என்.டி.ஆர் அபிமானி எல்லாருமே கோபத்தோட இருக்காங்க. ஏன்னா என்.டி.ஆரைக் கொலை பண்றதுக்கு யார் திட்டம் போட்டாரோ, அவரை நல்லவர்னு சொன்னது மட்டும் இல்லாம, மேல இருந்து என்.டி.ஆர் ஆசீர்வாதம் பண்ணுவார்னு சொன்னது ரொம்பத் தப்பு. அரசியல்ல இல்லாதப்போ இது மாதிரி பேசி… இருக்கிற பெயரும் போயிடுச்சு. ஆந்திரா பாலிடிக்ஸ் எப்படி இருக்கும், என்ன நடக்கும், எதுவும் தெரியாம சந்திரபாபு நாயுடு வீட்டுக்குக் கூப்பிட்டாங்க, சாப்பாடு போட்டாங்க, ஒரு ஸ்கிரிப்ட் கொடுத்தாங்க அதைப் படிச்சிட்டு சொல்றது சரியில்ல. ரஜினி சார்னா டாப்ல, அதுக்கு மேல-னு ஒரு ஐடியாவில் இருப்போம்.

ஆனா இன்னைக்கு ஜீரோ ஆயிட்டார். இந்த மாதிரி பேசி அவர் ஜீரோ ஆகுறது ரொம்ப கஷ்டமா இருக்கு. இனிமேலாவது எந்த ஒரு நடிகரும் ஒரு மாநிலத்துக்கு போகும்போது, அந்த மாநிலம் பத்தி தெரிஞ்சா பேசணும் தெரியலன்னா அமைதியா… தான் உண்டு தன் வேலை உண்டுன்னு வந்தா நல்லா இருக்கும். மன்னிப்புக் கேட்கச் சொல்லி யாரும் கேட்க மாட்டோம். அவர் அரசியல்ல இருந்தா, மன்னிப்புக் கேட்கணும். அவர் தேர்தல்ல நிக்கப் போறதில்ல.

இனிமே ஆந்திராவுக்கு நிறைய தடவை வரப் போறது இல்ல. அவர் தெரிஞ்சு பண்ணாரோ இல்ல, தெரியாம பண்ணாரோ ஆனா பேசிட்டாரு. இவ்வளவு நாள் வந்த பேர் எல்லாம் போயிட்டு இருக்கு. அதுக்கு ஏதாவது ஓர் அறிக்கை கொடுத்தா நல்லா இருக்கும்” என கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading