Local

ரணிலின் கேள்விக்கு பதிலளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

கொவிட் 19 தடுப்பு நடவடிக்கைகளுக்காக உலக வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் கேள்விக்கு பதிலளிக்க நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அமைச்சரவையில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இதன்போது அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்ட கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் பரவலை அடுத்து நாட்டின் பாதுகாப்பு வேலைத்திட்டங்களை கையாள உலக வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டு கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கேள்விக்கு முறையான பதிலளிக்க நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதி சுகாதார அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி அவர் பதிலளிப்பார் என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading