ரணில் ஒப்படைத்தது வங்குரோத்தடைந்த நாட்டை அல்ல
ரணில் ஒப்படைத்தது வங்குரோத்தடைந்த நாட்டை அல்ல! எரிவாயுவை கூட முறையாக வழங்கமுடியாத அரசாங்கம் வீட்டுக்குச் செல்லவும்🚨
எரிவாயு தட்டுப்பாட்டினால் தானம் தயாரிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ள அனுராதபுரம் சோமரதன தேரர், அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இது புண்ணியக் காரியங்கள் அதிகமாக நடைபெறும் காலம் எனக் குறிப்பிட்ட அவர், எரிவாயுவை உரிய நேரத்தில் வழங்குவதற்குக்கூட அரசாங்கத்தால் முடியவில்லை என விமர்சித்துள்ளார்.
“தானம் தயாரிப்பதற்கு இந்த எரிவாயு தட்டுப்பாடு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஒப்படைத்தது வங்குரோத்து நாடு அல்ல. இந்த அரசாங்கம் நாட்டை சொர்க்கமாக மாற்றும் என நாங்கள் நினைத்தோம். ஒரு குடும்பத்தைப் பழிவாங்குவதைத் தவிர, திருடர்களிடமிருந்து பணத்தைப் பெற்றதை நாங்கள் காணவில்லை. முடிந்தவர்கள் நாட்டை முன்னெடுத்துச் செல்லட்டும். இப்போதாவது அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.