Cinema

ரயில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகை!

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் படு ஹிட். படத்தின் வசூல் அனைவரும் எதிர்ப்பார்த்ததை விட மிகவும் அமோகமாக உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இந்த படத்தில் வரும் ஒரு பாடலில் நடனம் ஆடியிருந்தவர் ஜோதி ரெட்டி. நடன கலைஞரான இவர் சங்கரான்தி கொண்டாட கடப்பாவில் இருக்கும் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

திங்கட்கிழமை ஹைதராபாத் திரும்ப கடப்பாவில் ரயில் ஏறியுள்ளார். இடையில் ரயில் ஷாத்நகரில் நின்றுள்ளது, அவர் தான் இறங்க வேண்டிய இடம் தான் வந்துவிட்டதோ என ரயில் கிளம்பிய நேரத்தில் இறங்க முயற்சி செய்துள்ளார்.

அப்படி அவர் இறங்கும் போது தவறி கீழே விழுந்திருக்கிறார். அப்போது எதிர்ப்பாராத விதமாக அவர் தலையில் பயங்கர அடிபட சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தற்போது அவரது உறவினர்கள் தீவிர விசாரணை நடத்த போலீசிடம் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading