World

ரஷ்யாவில் பெண்கள் 8 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் – புட்டின் உத்தரவு

 

ரஷ்யாவில் உள்ள ஒவ்வொரு பெண்களும் எட்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மொஸ்கோவில் நடைபெற்ற உலக ரஷ்ய மக்கள் சபையில் உரையாற்றும் போது புட்டின் இவ்வாறு தெரிவித்தார்.

ரஷ்யாவின் பிறப்பு விகிதம் 1990ஆம் ஆண்டில் இருந்து குறைந்துகொண்டு வருகிறது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து அதிகப்படியான உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவின் மக்கள் தொகையை அதிகரிப்பது “வரவிருக்கும் பத்தாண்டுகளுக்கு எங்கள் இலக்கு” என்று புதின் தெரிவித்தார்.

மக்கள் தொகை குறைந்துவருவதால் ஏற்படும் பிரச்னைகளை ரஷ்யா சந்தித்து வருவதாகவும், இந்த பிரச்னைகளை எதிர்கொள்ள மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் விளாதிமீா் புதின் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading