Local

ராஜபக்ச சகோதரர்களை சீனாவுக்கு நாடு கடத்த கோரிக்கை!

ராஜபக்ஷ சகோதரர்களுடன் தற்போதையே ஆட்சியாளர்களையே சீனாவிற்கு நாடு கடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான பொ. ஜங்கரநேசன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

விவசாயத்துறை சார்ந்த போதிய நிபுணத்துவம் இல்லாததாலேயே நாட்டில் விவசாயத்துறை பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அத்துடன் குரங்குகளை ஏற்றுமதி செய்யாமல் ராஜபக்ஷ சகோதரர்களுடன் தற்போதையே ஆட்சியாளர்களையே சீனாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

குரங்குகளை ஏற்றுமதி செய்வது பொருத்தமில்லாத செயற்பாடு எனவும் அந்த முயற்சிகளை நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading