Local

ராஜபக்ச நீதிமன்றத்திற்கு வரும் போது மேலும் பல ஊழல்களை அம்பலபடுத்த தயாராகும் ஜே.வி.பி

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக கூறியுள்ள யோஷித்த ராஜபச்ச, நீதிமன்றத்திற்கு வரும் போது மேலும் சில விடயங்கள் தொடர்பாக தயாராகி வருமாறு, அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

யோஷித்த ராஜபக்சவுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள காணிகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை அனுரகுமார திஸாநாயக்க நேற்று வெளியிட்டிருந்தார்.

அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட தகவல்கள் பொய்யானவை எனவும் அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்வது குறித்து தனது சட்டத்தரணிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் யோஷித்த ராஜபக்ச அறிக்கை ஒன்றை வெளியிட்டு கூறியிருந்தார்.

இந்த நிலையில், யோஷித்த ராஜபக்ச அவதூறு வழக்கு விசாரணைகளுக்கு நீதிமன்றத்திற்கு வரும் போது, கடற்படையில் எப்படி இணைந்தார், Dartmouth Naval Academyக்கு சென்ற விதம், உக்ரைன் பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட விதம் போன்றவற்றுடன் தயாராகி வருமாறு நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.

தனது சமூக வலைத்தள கணக்கில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading