Cinema

ரிஸ்க் எடுத்த சீயான் விக்ரம்!

டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, இப்போது விக்ரமை வைத்து ‘கோப்ரா’ இயக்கி வருகிறார்.
படத்தில் ஒரு காட்சியில் வாயில் துணி கட்டப்பட்டு, கால்கள் கயிற்றில் கட்டப்பட்டு தலைகீழாக விக்ரம் தண்ணீருக்குள் தொங்க வேண்டும்.
இதற்காக டூப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றபோது விக்ரம் மறுத்து அவரே நடித்திருக்கிறார்.
தலைகீழாக தொங்கித் தொங்கி, வாயில் துணி அடைக்கப்பட்டிருந்ததால் அவரது மூக்கு மற்றும் காது வழியாக தண்ணீர் புகுந்து நரம்பு பாதிப்பு ஏற்பட்டதாம்.பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு மற்ற காட்சிகளையும் முடித்துக் கொடுத்தாராம்.
கொஞ்சம் வேகமாக ஓடவேண்டும் என்றாலே டூப் கேட்கும் இளம் நடிகர்களுக்கு மத்தியில் 54 வயதிலும் ஸ்டண்ட் காட்சிகளை தானே செய்யும் விக்ரம்தான் ரியல் ஹீரோ என்று படப்பிடிப்புக் குழு அவர் புகழ் பாடி வருகிறது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading