Local

லொஹான் ரத்வத்த எந்தப் பதவிகளுக்கும் தகுதி இல்லாதவர் சட்டத்தரணி சங்கம் தெரிவிப்பு!

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கடுமையானவை எனத் தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் பக்கச்சார்ப்பற்ற முறையில் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

​ லொஹான் ரத்வத்தைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கடுமையானவை.  ஆகையால் சிறைக்கைதிகள் தொடர்பிலான பொறுப்பில் இருப்பதற்கோ அல்லது எனைய பொறுப்புகளின் கீழிருந்து செயற்படுவதற்கோ, அவர் முற்றுமுழுதாக தகுதியற்றவர். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கும் அவருக்கு எவ்விதமான தகுதியும் இல்லை. நம்பிக்கைகுரிய நபரும் இல்லை சுட்டிக்காட்டியள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பக்கச்சார்ப்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு பரிந்துரைத்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading