World

வங்கிகளை காலவரையின்றி மூடுவதற்கு முடிவு!

லெபனானில் வங்கிகளை காலவரையின்றி மூடுவதற்கு அந்நாட்டின்  வங்கி அமைப்பு முடிவு செய்துள்ளது.

கொள்ளைகள் மற்றும்  ஆத்திரமமைந்துள்ள வைப்பாளர்கள் தங்கள் சேமிப்பை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாததால் வங்கிகளை மூட முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

லெபனான் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது, 75 சதவீத மக்கள் தீவிர வறுமையில் சிக்கி உள்ளனர்.

மேலும், வங்கி அமைப்பில் இருந்து வைப்பாளர்கள் எடுக்கக்கூடிய பணத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading