LocalNorth

வடக்கில் ஆட்டத்தை ஆரம்பித்தார் ராகவன்!

வடக்கு மாகாண புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று (09) தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதனை முன்னிட்டு இன்று காலை யாழ்ப்பாணம், பழைய பூங்கா வளாகத்திலுள்ள வட.மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சர்வமதத்தலைவர்களின் ஆளுநருக்கான நல்லாசி நிகழ்வு இடம்பெற்றது.

வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன்,

வட. மாகாண பிரதம செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர்கள் யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் பிரதானிகள், வடக்கு மாகாண அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading