Lead News

வாகனத்தில் உறங்கிக் கொண்டிருந்த போது வாகனத்துடன் 30 பேர் எரித்து கொலை

நைஜீரியாவின் வட கிழக்குப் பிராந்தியத்தில், சந்தேகத்திற்குரிய ஆயுததாரிகளால் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா சென்றுகொண்டிருந்தவர்கள், பயணத்தின் நடுவே இரவு வேளையில் வாகனத்தை நிறுத்திவிட்டு அதனுள் உறங்கிக்கொண்டிருக்கும் போதே இந்தக் கொடூரச் செயல் இடம்பெற்றுள்ளது.

இதனைத் தவிர குறித்த ஆயுதக் குழுவினர் சுற்றிவளைப்பொன்றில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பலரைக் கடத்திச் சென்றுள்ளனர்.

போகோஹராம் ஆயுதக்குழு இந்தச் செயலைப் புரிந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading