Local

புதிய யோசனையுடன் நாளை அமெரிக்கா பறக்கின்றார் மைத்திரி!

போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து இராணுவத்தை விடுவிக்கும் புதிய யோசனையுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை சனிக்கிழமை அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

ஐ.நா. பொதுச் சபையின் 73 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி நாளை அமெரிக்காவின் தலைநகரான நியூயோர்க் செல்கின்றார். எதிர்வரும் 25ஆம் திகதி மாலை ஐ.நா. பொதுச்சபையில் அவர் உரையாற்றவுள்ளார்.

இதன்போது, படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கான யோசனையை முன்வைக்கப் போவதாக ஜனாதிபதி ஏற்கனவே கூறியிருந்தார்.

நியூயோர்க்கிற்கான இந்தப் பயணத்தின்போது, பக்க நிகழ்வாக, உலகத் தலைவர்கள் சிலருடன் பேச்சுக்களை நடத்தவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

மேலும், ஐ.நா. பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், கொமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading