Cinema

விஜய்யுடன் 23 வருடம் கழித்து சேர்ந்து நடிக்கும் நடிகை!

வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் அடுத்ததாக முழு நேர அரசியல்வாதியாக மாற உள்ளதால், ஜனநாயகன் படமே அவரது கடைசி படம்.

ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, ஸ்ருதிஹாசன், மமிதா பைஜு, பாபி தியோல், கவுதம் மேனன், பிரியாமணி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், பிரபல நடிகை ரேவதி இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் விஜய்யின் அம்மாவாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகை ரேவதி, கடந்த 2002ஆம் ஆண்டு விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் விஜய்யின் அக்காவாக நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது 23 வருடம் கழித்து ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து அவருக்கு அம்மாவாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading