Cinema

விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா தீவிர சிகிச்சை பிரிவில் மகள்!

கனடாவில் நடிகை ரம்பா சென்ற கார் விபத்தில் சிக்கிய நிலையில் அவரின் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

90களில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரம்பா. சினிமாவிற்கு பிறகும் டிவி நிகழ்ச்சிகளில் தன் பயணத்தை தொடர்ந்த ரம்பா, அதன் பின் இலங்கை தமிழரான தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் குடும்பத்தாருடன் கனடாவில் குடியேறி மூன்று குழந்தைகளுக்கு தாயானார். இந்த நிலையில் பள்ளி முடிந்து தன் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வரும் வேளையில், ரம்பாவின் கார் மீது மற்றொரு கார் மோதியது. இதில் அவரது குழந்தைகள் மற்றும் ரம்பா உள்ளிட்டோர் காயம் அடைந்தனர்.

ரம்பா உள்ளிட்டோர் சிறு காயங்களுடன் தப்பிய நிலையில், இளம் குழந்தையான சாஷா மட்டும் படுகாயம் அடைந்ததார். அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விபத்து நடக்கும் சில மணி நேரங்களுக்கு முன்பு தான், அதாவது அந்த குழந்தை பள்ளிக்குச் செல்லும் முன்பு தான் ரம்பா ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

Actress

அதில், தற்போது தீவிர சிகிச்சையில் உள்ள குழந்தை சாஷா, ப்ரென்ச் பாடல் ஒன்றை தன் தாயின் தோள் மீது அணைத்த படி பாடிக் கொண்டிருந்தது. க்யூட்டாக அந்த குழந்தை பாட, அதை பிரமிப்பாக பார்த்து ரசித்தபடி பூரித்து போயிருந்தார் ரம்பா. யார் கண் பட்டதோ, வீடியோ வெளியிட்ட 24 மணி நேரத்திற்கு முன்பே, அந்த குழந்தை விபத்தில் சிக்கியுள்ளது.

இதனிடையில் குழந்த சாஷா விரைவில் குணமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்று ரம்பா கேட்டு கொண்டுள்ளார். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading