Local

*விமர்சையாக நடைபெற்ற காணி கையளிக்கும் நிகழ்வு*

 

-அபூருமைஸ்-

சில்மியாபுர அல்முர்ஷித் மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவுக்கான காணி கையளிக்கும் நிகழ்வு அண்மையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் விசேட அதிதியாகக்கலந்து கொண்டு சிறப்பித்தார்.

வெளிமடை வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட
ப/சில்மியாபுர வித்தியாலயத்தின் இடப்பற்றாக்
குறையினை நீக்கும் வகையில் ஜனாப்.
ஜே.டீ. எம். முர்ஷித் தலைமையிலான சில்மியாபுர “காணி கொள்வனவுக்குழு” மேற்கொண்ட முயற்சியின் காரணமாக இப்பாடசாலைக்கென ஒரு கோடி பதினாறு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா செலவில்
58 பர்சஸ் நிலம் கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சில்மியாபுர மக்கள் மற்றும் உள்ளூர் வெளியூர் தனவந்தர்கள், நலன் விரும்பிகள், பழைய மாணவர்கள், இதற்கான நிதியினை வழங்கியிருந்தனர். இதனடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட ஆரம்ப பிரிவுக்கான காணி அன்றைய தினம் காணிக் கொள்வனவுக் குழுவினால் பெற்றுக் கொள்ளப்பட்ட காணி உரித்து ஆவணங்கள் பாடசாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த புதன்கிழமை (30) வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்ற
இவ்வைபவத்தில் மாகாண ஆளுநர் கபில ஜயசேகர,வெளிமடை வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான
ஜே.டி.எம்.முர்ஷித்,
ஏ. ஆர்.எம். நவாஸ், திருமதி மலல்கொட, உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.மில்ஹான் உட்பட பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கல்விமான்கள், உலமாக்கள், ஊர்மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின்
கலை நிகழ்ச்சிகள்
இடம்பெற்றதுடன் நிகழ்ச்சிகள் தரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க
விடயமாகும்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading