Cinema

விமான விபத்தில் இருந்து உயிர் தப்பினார் நடிகை ரோஜா!

நடிகை ரோஜா விமான விபத்தில் சிக்க இருந்து தப்பித்த சம்பவம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

நடிகை ரோஜா ராஜமுந்திரியில் இருந்து திருப்பதிக்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது, விமான எதிர்பாராத விதமாக கோளாறு ஏற்பட்டு தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன்பின்னர் விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் விமானம் விபத்தில் இருந்து தப்பி உள்ளது. திருப்பதியில் தரை இறங்க வேண்டிய விமானம் பெங்களூக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

இதைப்பற்றி நடிகை ரோஜாவின் கணவர் செல்வமணி பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்திருக்கிறார். அதில், இச்சம்பவம் தொடர்பாக நான் ரோஜாவுக்கு போன் செய்தேன்.

அவர் விமானம் பெங்களூருவில் தரையிறங்கியதாகவும், 4 மணி நேரமாக கதவு இன்னும் திறக்கப்படவில்லை என நான் பின்னர் பேசுகிறேன் என தெரிவித்தார்.

மேலும் அவர் அலுவலக வேலையின் காரணமாகவே விமானத்தில் பயணித்ததாகவும், குடும்ப உறுப்பினர்கள் வேறு யாரும் அவருடன் பயணிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading