Local

வியாதி தாங்க முடியாமல் வயோதிபர் தற்கொலை!

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் பொகவந்தலாவ பொகவான கெசல்கமுவ ஓயாவில் இன்று ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் பொகவந்தலாவ பொகவானை தோட்டப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75 வயது கொண்ட பெரியண்ணன் கருப்பையா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று தீடீரென காணாமல் போன நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் உயிரிழந்த நபரின் பாதணிகள், குடை, மாதாந்த வைத்திய பரிசோதனை, புத்தகம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட குறித்தப் புத்தகத்தில் தனக்கு வியாதி தாங்க முடியவில்லை என்றும் தனது முடிவுக்கு தானே பொறுப்பு என்றும் அவர் தனது கைப்பட எழுதியுள்ளார்.

மேலும், தனது மகன் மிகவும் நல்லவர் என்றும் தன்னை அன்பாக பார்த்துக்கொள்வார் எனவும் யாரையும் தண்டிக்க வேண்டாம் என்றும் எழுதி வைக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading