Uncategorized

விராட் கோலியின் சாதனைக்குக் குவியும் பாராட்டுக்கள்!

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது ஆட்டத்தைத் தொடர்ந்தது.

விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆட்டத்தை தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரவீந்திர ஜடேஜா 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின், விராட் கோலியுடன் ஸ்ரீகர் பரத் ஜோடி சேர்ந்தார். இருவரும் இந்திய அணியின் ரன்களை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் இது அவருடைய 28-வது சதமாகும்.

விராட் கோலி 1205 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் தனது சதத்தைப் பதிவு செய்துள்ளார். அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளிலும் சேர்த்து இது அவருடைய 75-வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading