World

விவாகரத்தால் உலகின் பணக்காரர்களில் ஒருவராக மாறியப் பெண்!

உலகின் பணக்கார தம்பதியான பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் 27 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு, கடந்த 2021-ம் ஆண்டு தங்கள் பிரிவை அறிவித்தனர்.

அவர்களின் இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர்களின் விவாகரத்து அறிவிக்கப்பட்டபோது, ​​உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் வழங்கும் ஜீவனாம்சத் தொகையை பற்றி அறிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக இருந்தனர்.

பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸின் விவாகரத்தில் சரியான ஜீவனாம்ச தொகை ஊடகங்களில் வெளியிடப்படவில்லை என்றாலும், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தனது முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸுக்கு கணிசமான தொகையை செலுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பில் கேட்ஸ் 73 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ. 6 லட்சம் கோடியை மெலிண்டா கேட்ஸுக்கு கொடுத்தார்.

இதனால் மெலிண்டா உலகின் பணக்கார பெண்களில் ஒருவராக மாறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading