World

வீதியில் ஆறாக கரை புரண்டு ஓடிய வைன்!

 

போர்த்துக்கல்லில் வீதியில் வைன் கரை புரண்டு ஓடியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

போர்த்துக்கல் தலைநகரிலிருந்து சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது டெஸ்டிலேரியா லெவிரா எனும் மது உற்பத்தி தொழிற்சாலை. இத்தொழிற்சாலையில் ரெட் வைன் எனப்படும் கருந்திராட்சைகளில் இருந்து காய்ச்சி வடிகட்டி, பதப்படுத்தப்படும் மது தயாரிக்கப்படுகிறது.

இரு பீப்பாய்கள் உடைந்ததால்
இங்கு தயாரிக்கும் மது, மிக பெரிய அளவிலான பீப்பாய்களில் தேக்கி வைக்கப்படும். இந்நிலையில் அவ்வாறு தேக்கி வைக்கப்பட்ட இரு பீப்பாய்கள் உடைந்ததால், அதிலிருந்த மது வீதிகளெங்கும் ஓடியது. இவ்வாறு ஓடிய மதுவின் அளவு சுமார் 20 இலட்சம் லீட்டர் (2.2 மில்லியன் லீட்டர்) இருக்கலாம் என்றும் சுமார் 20 இலட்சம் மது போத்தல்களுக்கான கொள்ளளவு இருக்கும் என்றும் அந்நாட்டு பத்திரிகைகள் கணிக்கின்றன.

அதிஷ்டவசமாக, தற்போது வரை இதனால் யாருக்கும் எந்தவித ஆரோக்கிய கேடும் நடந்ததாக தகவல் இல்லை.

அந்த ஊரில் உள்ள செர்டிமா ஆற்றில் இது கலந்து விடக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். ஆனால், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மது ஆற்றின் ஓட்டத்தை தடுத்து, அதனை அங்குள்ள ஒரு வயல்வெளியில் செல்ல பாதை அமைத்தனர். இதனால், செர்டிமா நதியில் இது கலப்பது தடுக்கப்பட்டது.

உலகில் வலிமையான இராணுவத்தை கொண்ட நாடுகள் எவை என்று தெரியுமா..!
உலகில் வலிமையான இராணுவத்தை கொண்ட நாடுகள் எவை என்று தெரியுமா..!

பொறுப்பேற்றது நிறுவனம்

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கும், அதனால் ஏற்பட்ட நஷ்டத்திற்கும் தாங்களே பொறுப்பேற்பதாகவும், ஊரை சுத்தம் செய்யும் செலவையும் முழுவதும் ஏற்பதாகவும் டெஸ்டிலேரியா லெவிரா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading