Local

வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில், இன்றையதினம் தங்கத்தின் விலையானது சற்று வீழ்ச்சி கண்டுள்ளது.

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 645,931 ரூபாவாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 182,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் (08 கிராம்) தங்கப் பவுண் ஒன்று 167,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் (08 கிராம்) தங்கப் பவுண் ஒன்று 159,550  ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய தங்க விற்பனை நிலவரம் | Today Gold Price Sri Lanka Gold Rate Dollar Price

அதேசமயம், 24 கரட் (08 கிராம்)தங்கத்தின் ஒரு கிராம் விலை 22,790 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,900 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 19,950 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading