Local

வெளிநாடொன்றில் ஹீரோவாக செயற்பட்ட இலங்கையர்!

தென் கொரியாவில் விபத்துக்குள்ளான போர் விமானத்தின் விமானிகளை பாதுகாப்பாக மீட்ட இலங்கையர் ஒருவருக்கு, அந்நாட்டு அரசு சட்டப்பூர்வ வதிவிட அனுமதியை வழங்கி கௌரவித்துள்ளது.

இதன் மூலம் நாடு கடத்தப்படும் அபாயத்திலிருந்து அவர் தப்பியுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம், தென் கொரிய விமானப்படைக்குச் சொந்தமான F-4 Phantom ரக போர் விமானம் ஒன்று கியோங்கி மாகாணத்தில் உள்ள ஜேபுடோ கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இயந்திரத்தில் ஏற்பட்ட தீப்பரவல்

இயந்திரத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

வெளிநாடொன்றில் ஹீரோவாக செயற்பட்ட இலங்கையர்! வதிவிட அனுமதி | Sri Lankan Granted Legal Status In South Korea

விமானம் கடலில் விழுவதற்கு முன்னதாக, அதிலிருந்த இரண்டு விமானிகளும் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினர்.

எனினும், அவர்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளனர். இதன் போது அருகில் உள்ள கடற்பாசி பண்ணையில் பணியாற்றி வந்த ருவான் என்ற இலங்கையர் தனது நண்பர்களுடன் உடனடியாகப் படகில் சென்று அவர்களை காப்பாற்றியுள்ளார்.

ருவானின் இந்த செயலைப் பாராட்டி உள்ளூர் சமூகம் அவருக்குப் பல விருதுகளை வழங்கியது.

சட்டப்பூர்வமாக வாழ அனுமதி

எனினும், அவரது விசா காலம் முடிவடைந்ததால் அவர் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக கருதி தென் கொரியாவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இருந்தார்.

இந்த விடயத்தை அறிந்த தென் கொரிய விமானப்படைத் தலைமையகம், ருவானை தேசத்திற்காக பங்காற்றியவர் என அடையாளப்படுத்தி, அவருக்குக் கருணை காட்டுமாறு அந்நாட்டு நீதி அமைச்சிடம் பரிந்துரை செய்தது.

வெளிநாடொன்றில் ஹீரோவாக செயற்பட்ட இலங்கையர்! வதிவிட அனுமதி | Sri Lankan Granted Legal Status In South Korea

விமானப்படையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதி அமைச்சு, கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி ருவானுக்குப் புதிய வேலை விசாவை வழங்கியது.

அத்துடன் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக விதிக்கப்பட வேண்டிய அனைத்து அபராதங்களையும் தள்ளுபடி செய்தது. மேலும் அவர் தொடர்ந்து தென் கொரியாவில் சட்டப்பூர்வமாக வாழ அனுமதி அளித்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading