Local

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (25) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்குத் தொழிலாளர்களை அனுப்பும் நடவடிக்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில், இஸ்ரேலிய வேலைவாய்ப்புகளுக்காக இலங்கைத் தொழிலாளர்களை அனுப்பியதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குறித்த முறைகேடுகள் தொடர்பில், அப்போதைய வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்த மனுஷ நாணயக்காரவும் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அந்தச் சம்பவம் தொடர்பிலேயே வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading