World

வெள்ளையாக குழந்தை பிறந்தால் மரண தண்டனை வழங்கும் பழங்குடியினர்கள்!

குழந்தை வெள்ளையாக பிறந்தால் அந்த குழந்தைக்கு உடனே மரண தண்டனை விதிக்கப்படும் விநோத பழக்கம் ஜாரா மக்களிடையே பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் வசித்து வருபவர்கள் தான் ஜாரவா பழங்குடியின மக்கள். ஜாரவா என்ற சொல்லுக்கு அர்த்தம் மண்னின் மைந்தர்கள் என்பதே.

இவர்கள் அந்தமானில் வாழ்ந்தாலும் இந்தியர்களின் மரபணு இவர்களது உடலில் இல்லை. இந்த மக்களை சுற்றுலா பயனிகள் சந்திக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இவர்களை புகைப்படம் எடுப்பதோ, வீடியோ எடுத்து வெளியிடுவதோ சட்டவிரோதமானது. இதனிடையே, இங்கு வாழும் பெண்ணிற்கு வெள்ளை நிற குழந்தை பிறந்தால், மரண தண்டனை விதித்து அந்த குழந்தையை அவர்கள் கொன்று விடுவார்கள் என்பது விநோதத்தின் உச்சமே.

இவர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பதால் கருமை நிறத்தில் தான் இருப்பார்கள். மேலும் அவர்களை பொறுத்தவரை, வெள்ளை நிறத்தில் இருக்கும் குழந்தையை வேற்றுமையாக கருதுகிறார்கள்.

இதனால் தான் கருப்பு நிறத்தை தாண்டி வெண்மை நிறத்திலான குழந்தையை கொன்று விடுகிறார்கள். கருப்பு என்பது இவர்களுக்கு முக்கியம் என்பதால், இங்கு கர்பிணிகளுக்கு விலங்குகளின் ரத்தம் கொடுக்கப்படுமாம்.

அந்த ரத்தத்தை குடித்தால், பிறக்கும் குழந்தையின் நிறம் கருப்பாக இருக்கும் என்கிறார்கள். தற்போது ஜாரவா பழங்குடி இனம் அழிவின் விளிம்பில் இருக்கிறது.. மொத்தமாகவே வெறும் 380 பேர் மட்டுமே இந்த இனத்தில் எஞ்சி உள்ளார்களாம்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading