Local

வைத்தியரிடம் கைக்குண்டை வழங்கிய நபர் கைது!

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு  கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர்  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்பிடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியருக்கு கைக்குண்டு வழங்கிய குற்றச்சாட்டிலே குறித்த சந்தேக நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை ரன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவரே நேற்றைய தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து  வெடிகுண்டுகளை  பெற்றுக்கொள்ளும் வகையில், குறித்த ஓய்வுபெற்ற வைத்தியர் பணம் வழங்கியுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த சந்தேக நபர் துறைமுக அதிகார சபையின் ஊழியர் எனவும் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் விசாரணைகள் ஊடக கண்டறியப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading