Local

‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இலங்கையில்

உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலோன் மஸ்க், தனது “X” (முன்னதாக Twitter) கணக்கில், ‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைய சேவைகளை வழங்கும் நோக்கில், ஸ்டார்லிங்க் லங்கா (தனியார்) நிறுவனத்திற்கு, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, 2024 ஓகஸ்ட் 14ஆம் திகதி “தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்” உரிமத்தை வழங்க நடவடிக்கை எடுத்தது.

இந்த சேவை, இலங்கையில் தற்போது வழங்கப்படும் ஃபைபர் தொழில்நுட்ப இணைய சேவையைவிட பல மடங்கு வேகமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகில் எங்கு இருந்தாலும் இந்த செயற்கைக்கோள் இணையத்தை பயன்படுத்த முடியும் என்பதால், இது தொலைதூர பிரதேசங்கள் மற்றும் இணைய வசதி குறைந்த பகுதிகளுக்கு பெரும் நன்மை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No description available.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading