Local

ஸ்ரீல.சு.கட்சியினர் சிலர் டலஸுக்கு வாக்களிக்கவில்லையாம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு அனைத்து கட்சி உறுப்பினர்களும் வாக்களிக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்றைய வாக்கெடுப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்கள் அனைவரும் பாராளுமன்ற உறுப்பினர் அழகப்பெருமவுக்கு வாக்களிக்கவில்லை.

இந்த உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை தீர்மானிக்க மத்திய குழுவிற்குள் கலந்துரையாடல் நடத்தப்படும் எனஅவர் தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்த அமைச்சுப் பதவிகளையும் ஏற்காது, கட்சியின் வேலைத்திட்டத்தை நிறைவேற்றும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading