Local

ஹஜ் பயணம் மேற்கொள்ள 10 லட்சம் யாத்ரீகர்களுக்கு அனுமதி!

இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள வெளிநாட்டவர்கள் உட்பட 10 லட்சம் யாத்ரிகர்களை அனுமதிக்க சவுதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி ,யாத்ரீகர்கள் 65 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகவும், கொரோனாவுக்கு 2 டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் எனவும் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் ,வெளிநாட்டவர்கள் அண்மையில் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழையும் காண்பிக்க வேண்டும் எனவும், உடல் ஆரோக்கியத்திற்கு அவர்கள் எடுத்துக்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading