World

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: அமெரிக்கா கைவிரிப்பு

ஈரான் மீதான போர் தொடங்கியதிலிருந்து, ஹார்முஸ் நீரிணை வழியாக இராணுவப் பாதுகாப்பளிக்க கப்பல் நிறுவனங்களின் தினசரி கோரிக்கைகளை அமெரிக்க கடற்படை நிராகரித்து வருகிறது.

எண்ணெய் ஏற்றுமதியில்

தற்போதைய சூழலில் ஹர்முஸ் நீரிணையில் பயணிப்பது ஆபத்தை அதிகரிக்கச் செய்யும் என்றே அமெரிக்க கடற்படை விளக்கமளித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு | Hormuz Escorts Not Possible

அமெரிக்க கடற்படையின் இந்த முடிவு மத்திய கிழக்கு எண்ணெய் ஏற்றுமதியில் தொடர்ச்சியான இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன, மேலும் ஹார்முஸ் நீரிணையில் வழக்கமான கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு தேவைப்படும் போதெல்லாம் கடற்படை பாதுகாப்பை வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்புகளுக்கு இது முரணாக அமைந்துள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போர் தொடங்கிய பிப்ரவரி 28 ஆம் திகதியில் இருந்தே ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஏற்றுமதி இதனால் முடங்கியுள்ளது, உலகளாவிய எண்ணெய் விலைகள் 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை கண்டிராத உச்சத்திற்கு உயர்ந்துள்ளது.

ஈரான் போர் தொடங்கிய முதல் நாளிலேயே ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாகவும், அதைக் கடந்து செல்ல முயற்சிக்கும் எந்தவொரு கப்பலின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தும் என்றும் ஈரானின் புரட்சிகர காவல்படையின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்திருந்தார்.

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு | Hormuz Escorts Not Possible

பேரழிவு விளைவுகள்

எச்சரிக்கையை மீறிய பல கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்கானது. இந்த நிலையிலேயே தற்போது பாதுகாப்பளிக்க முடியாத நிலை உள்ளதாக அமெரிக்க கடற்படை கைவிரித்துள்ளது.

ஆனால், தேவைப்படும்போது ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்களுக்கு பாதுகாப்பளிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக ட்ரம்ப் சமீபத்திய நாட்களில் பலமுறை கூறியுள்ளார்.

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு | Hormuz Escorts Not Possible

இதனிடையே, உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியாவின் அரம்கோ நிறுவனம், ஈரான் மீதான போர் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை தொடர்ந்து சீர்குலைத்தால், உலக எண்ணெய் சந்தைகளுக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading