ஹிட்லர் என விமர்சிப்பவர்களுக்கு இலங்கை ஜனாதிபதி வழங்கிய பதில்
“என்னை சிலர் ஹிட்லரென கூறுகின்றனர். ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் நாடொன்றால் ஒருபோதும் முன்னோக்கி செல்ல முடியாது. ஜனநாயகத்தை பாதுகாத்தபடியே பயணிக்க வேண்டும். எமது ஆட்சியில் ஜனநாயகம் முழுமையாக பாதுகாக்கப்படும்.”- என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜனநாயக வழியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு கடந்த ஈராண்டுகளில் கண்ணீர்புகை தாக்குதல் நடத்தப்படவில்லை. நீர்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஜனாதிபதி கூறினார்.
அக்குரஸ்ஸ பகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
“ சட்டம் அமுலாகும்போது ஊழல்இ மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கூச்சலிடுகின்றனர். எதற்காக குடும்பமொன்று இலக்கு வைக்கப்படுகின்றது என சிலர் கேட்கின்றனர். குடும்பம் குற்றம் இழைத்திருந்தால்இ தண்டனையை எதிர்கொள்ளதான் நேரிடும். சட்டம் அனைவருக்கும் சமம்.”- என்றார் ஜனாதிபதி

You must be logged in to post a comment.