இலங்கைத் திரைப்படம் ஆஸ்கார் விருதுக்குத் தேர்வாகி சாதனை!
இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் திரைப்படம் ஆஸ்கார் விருதுக்குத் தேர்வாகி மாஸ் சாதனை!🚨
2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மதிப்புமிக்க ஆஸ்கார் விருது விழாவிற்கான இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ நுழைவாக (Official Entry), இலங்கைத் தமிழ் திரைப்படமான ‘அந்தோனி’ தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இளையராஜா இசையமைப்பில் உருவான இந்த திரைப்படம், ஆஸ்கார் விருதின் ‘சிறந்த சர்வதேச திரைப்படம்’ (Best International Feature Film) பிரிவில் போட்டியிட தேர்வாகியுள்ளது.
இந்த படத்தில் கயல் வின்சன்ட், டிஜே பானு மற்றும் சுதர்சன் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இலங்கைத் தமிழ் திரைப்படம் ஒன்று நாட்டின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக ஆஸ்கார் விருதுப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது திரைத்துறையில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

You must be logged in to post a comment.